எல்லைகளை சாட்டிலைட் மேப்பிங் வாயிலாக வரையறுக்கும் திட்டம் தொடக்கம்

எல்லைகளை வரையறுக்கும் திட்டம்-எல்லைப் பிரச்சனையை தீர்க்க, எல்லைகளை சாட்டிலைட் மேப்பிங் வாயிலாக வரையறுக்கும் திட்டம் துவங்கி உள்ளது.

வடகிழக்கு மாநில கவுன்சிலும், விண்வெளித்துறையின் கீழ் உள்ள NESAC என்ற அமைப்பும் சேர்ந்து , விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எல்லைகளை அறிவியல்பூர்வமாக வரையறுக்கும்.

இந்த திட்டத்தை மேற்கொள்ள வடகிழக்கு மாநில கவுன்சிலின் தலைவராகவும் இருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை தெரிவித்திருந்தார்.

எல்லை தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் எந்த சிக்கலும் இன்றி அதை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.