கடலில் நொறுங்கி விழுந்த வீடு..! வைரலாகும் காட்சிகள்!

அர்ஜென்டினாவின் ரிசார்ட் நகரமான மார் டெல் துயேயில் கடற்கரை ஓரத்தில் வீடு ஒன்று அமைந்திருந்தது.

வீட்டின் அடிதளத்தில் தொடர்ந்து கடல் அலை அடிக்க, அந்த வீடு அப்படியே கடலில் நொறுங்கி விழுந்தது.

1960 மற்றும் 1970-களுக்கு இடையில் கட்டப்பட்ட இந்த இரண்டு மாடி வீட்டை முழுவதுமாக தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து நொறுங்கியதை வீடியோ பதிவு செய்துள்ளனர்.

சம்பவம் நடக்கும் போது அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டில் யாரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது