கலர் கோழி குஞ்சு விற்பனை படுஜோர்

வாகனங்களில் சாலையோரம், ‘கீச் கீச்’ என்று சத்தமிட்டும், கலர் கோழி குஞ்சுகளை பார்த்ததும் நிறுத்தி வாங்கி செல்கின்றனர்.

கரூர் நகர பகுதியில், பல்வேறு இடங்களில் கலர் கோழிக்குஞ்சுகள் விற்பனை சிறப்பாக நடந்து வருகிறது.

கோழி குஞ்சுகள் பல்வேறு வண்ணங்களில் ஜோடி, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பல்வேறு வண்ணத்தில் இருப்பதால் காண்பவர் மனதை கவர்கிறது.

கொரோனா ஊரடங்கால், பாதிப்படைந்த விற்பனையாளர்கள், தற்போது ஏற்பட்ட தளர்வுகளால் விற்பனை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.