‘குட்கா’வுக்கு எதிராக அதிரடி 4,049 பேரை அள்ளியது போலீஸ்

‘குட்கா’ உள்ளிட்ட போதை பொருள் விற்பனைக்கு எதிராக,போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்.

4,049 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2013ல் குட்கா, மாவா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்தார்.

ஆனால் தடையை மீறி, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த மாதவ ராவ், சீனிவாச ராவ், உமா சங்கர் குப்தா ஆகியோர், செங்குன்றம் குட்கா தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வந்தனர்.

ஆண்டுக்கு 639 கோடி ரூபாய் வரை சம்பாதித்து வந்தனர்.