சர்வதேச விண்வெளி நிலையத்தில் திடீர் தீ: அமெரிக்கா, ரஷ்யா தகவல்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புதிதாக அனுப்பப்பட்ட ரஷ்ய கலன் ஒன்றில் எதிர்பாராத விதமாக விபத்தால் கோளாறு ஏற்பட்டது

இந்தக் கோளாறு கட்டுப்பாட்டுக் குழுவினரால் சரிசெய்யப்பட்டு அனைத்து அமைப்புகளும் நன்றாக இயங்குவதாகவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமை நாசா தெரிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த ஏழு விண்வெளி வீரர்களுக்கும் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த வேறு ஒரு கலனில் இருந்த உந்துகை கருவிகள் இயக்கபட்டபோது இந்தக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது.