தமிழக பட்ஜெட் வரும் 13ம் தேதி தாக்கல்

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், தமிழக அரசின் முதல் பட்ஜெட், வரும் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

அதற்கு முன் 9ம் தேதி, தமிழக அரசின் தற்போதைய நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது.

அ.தி.மு.க., ஆட்சி முடியும் நிலையில், 2021 – 22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட், பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

தி.மு.க., அரசின் முதல் பட்ஜெட், அதாவது 2021 – 2022ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை, வரும் 13ம் தேதி காலை 10:00 மணிக்கு, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.