நடிகர் தனுஷ் வழக்கு – இன்று வெளியாகும் தீர்ப்பு…!

நடிகர் தனுஷ் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்திருந்த சொகுசு காருக்கான வரிவிலக்கு வழக்கில் இன்று நீதிமன்ற உத்தரவு வெளியாகவுள்ளது.

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரியாக 60.66 லட்சம் செலுத்த வேண்டும் என்று வணிகவரித் துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்தும், வரி விலக்கு கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

விதிமுறைகளை பின்பற்றி காரை பதிவு செய்ய ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு 2016-ம் ஆண்டு ஏப்ரலில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் வர உள்ளது.