பாடப் புத்தகங்களில் சாதிப் பெயர்களை நீக்கியது தமிழ்நாடு அரசு

பாடப் புத்தகங்களில் உள்ள சாதிப் பெயர்களை தமிழ்நாடு அரசு நீக்கியுள்ளது.

தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் புத்தகங்களில் இடம்பெற்றிருந்த தலைவர்களின் சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

பாடப்புத்தகங்களில் தலைவர்களின் சாதிப்பெயர்கள் திருத்தப்பட்டு மாணவர்களுக்கு அண்மையில் புதிய பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.

தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் இயற்பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.