ரூ70,00,00,000/- செலவில் பிரமாண்டமாக கலைஞர் நூலகம்!

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூலகத்தை போல் பிரம்மாண்டமாக மதுரையில் கலைஞர் நூலகம்.

இதற்கான நிலத்திற்காக மதுரை மாட்டுத்தாவணி, உலக தமிழ் சங்க வளாகம், தமுக்கம், பழங்காநத்தம், சிம்மக்கல், ஒத்தக்கடை பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் ஏழு தளங்களுடன் நவீன வசதிகள் கொண்ட நூலகம் மதுரையில் அமையயுள்ளது.

மதுரை – நத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் கலைஞர் நூலகம் அமைய சரியான இடமாக இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கான ஆரம்பகட்ட பணிகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.