*கி.மு. 356ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான ஆர்ட்டெமிஸ் கோவில் தீ வைத்து அழிக்கப்பட்டது.

*2007ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி ஹாரி பாட்டர் தொடர் நாவலின் கடைசிப் பாகம் வெளிவந்தது.

*1954ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

*1899ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி இந்திய ஆன்மிகவாதி சாரதா தேவி மறைந்தார்.

நினைவு நாள் :-

சிவாஜி கணேசன்
*புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் 1928ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி விழுப்புரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்.

*தமிழ் திரையுலகில், பராசக்தி என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான சிவாஜி கணேசன் அவர்கள், முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சிவாஜி கணேசன் அவர்கள், 1955 வரை திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது மற்றும் செவாலியே விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் தனது 74வது வயதில் 2001ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி மறைந்தார்.

பிறந்த நாள் :-

எர்னஸ்ட் ஹெமிங்வே
*நோபல் பரிசு பெற்ற சிறந்த எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) 1899ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலம் ஓக் பார்க் நகரில் பிறந்தார்.

*முதல் உலகப்போரின் போது இத்தாலி ராணுவத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக சேவை செய்ததற்காக இத்தாலியன் வீர சாகச பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

*இவர் எ ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ், ஃபார் ஹும் தி பெல் டோல்ஸ் (1940), தி ஓல்ட் மேன் அண்ட் தி ஸீ (1951) போன்ற உலகப் புகழ் பெற்ற நூல்களை எழுதியுள்ளார். எழுதுவது போலவே, பல சாகச செயல்களையும் செய்து வந்தார்.

*இலக்கியத்துக்கான நோபல் பரிசு(1954), புலிட்சர் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

*தனித்துவமான எழுதும் பாணியில் இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எர்னஸ்ட் ஹெமிங்வே 62வது வயதில் (1961) மறைந்தார்.

உமாசங்கர் ஜோஷி
*சுதந்திரப் போராட்ட வீரரும், இலக்கியக் களத்தில் முக்கிய படைப்பாளியுமான உமாசங்கர் ஜோஷி (Umashankar Joshi) 1911ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி குஜராத் மாநிலம், சாபர்கண்ட் மாவட்டத்தின் பாம்னா கிராமத்தில் பிறந்தார்.

*காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 1930ல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். 1931ல் வெளிவந்த விஷ்வசாந்தி என்ற காவியம் இவரை இலக்கிய உலகில் முக்கியப் படைப்பாளியாக உயர்த்தியது.

*அதை தொடர்ந்து இவர் இயற்றிய படைப்புகள் குஜராத் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன. ஞானபீட விருது, நர்மத் சுவர்ண சந்திரக் பரிசுகள், சோவியத் நேரு விருது, தில்லி சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

*இலக்கிய களத்தில் பன்முகப் பரிமாணம் கொண்ட உமாசங்கர் ஜோஷி 77வது வயதில் (1988) மறைந்தார்.

 

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *