தக்காளி :

தக்காளி சமையலிற்கு காயாகவும் பழமாகவும் பயன்படும் ஒரு காய்கறிச் செடியினமாகும். இது சோலானேசியெ (Solanaceae ) அல்லது நிழல்சேர் (nightshade) செடிக் குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும்.

இதன் தாயகம் தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் தென் பகுதியாகும். ஓராண்டுத் தாவரமான இது 1-3 மீ உயரமாக வளர்கிறது.ஆங்கிலத்தில் இதற்கு வழங்கும் பெயரான டொமேட்டோ (அல்லது டொமாட்டோ) என்பது.

தக்காளியின் மருத்துவப் பயன்கள்
*கண்கள் ஒளியுடன் திகழ உதவுகிறது. சிறுநீர் எரிச்சலைப் போக்குகிறது.
*தொண்டைப் புண்ணை ஆற்றும்.
* இரத்தத்தை சுத்தமாக்கும்.
* எலும்பை பலமாக்கும்.
* நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் தோலை பளபளப்பாக்கும்
*இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
* பற்களும், ஈறுகளும் வலிமை பெறும்,
* மலச்சிக்கலை நீக்கும்.
* குடற்புண்களை ஆற்றும்.
* களைப்பைப் போக்கும்.
* ஜீரண சக்தியைத் தரும்.
*சொறி, சிரங்கு, சரும நோய்களைப் போக்கும்.
* தொற்று நோய்களைத் தவிர்க்கும்.
*வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றும்.
*கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும்.
* உடலின் கனத்தைக் குறைக்கும் உதவும்.
*நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு இது.

தக்காளியில் உள்ள சத்துக்கள் :

* இரும்புச் சத்து – 0.1 மி.கிராம் * சுண்ணாம்புச் சத்து – 3.0 மி.கிராம் * வைட்டமின் ஏ = 61 மி.கிராம்
உடல் சோர்வு நீங்க : * தக்காளி சூப் செய்து பருகினால் சோர்வும், களைப்பும் நீங்கி விடும்.
தோல் நோய் குணமாக : நன்கு பழுத்த தக்காளி இரண்டு (அ) மூன்றை எடுத்து, சிறிது சிறிதாக அரிந்து, மிக்ஸியிலிட்டு, ஜஸ் எடுத்து வெறும் வயிற்றில் * காலையில் பருகி வந்தால் போதும், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
மலச்சிக்கல் நீங்க : * காலை, மாலை இரு வேளைகள், இப்பழங்களை சாப்பிட்டு வாருங்கள், மலச்சிக்கல் அகன்று விடும்.

கன்னத்தை பளபளப்பாக்கும் தக்காளி

முகத்தில் தடவினால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.
* நீண்ட நாட்களாக முகத்தை சரிவர
பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து காணப்படும்.
அவர்களுக்கு தக்காளியின் சாறுடன் சிறிது ரவையைக் கலந்து, நன்றாக முகத்தில் தேய்த்து கழுவினால் முகம் மிருதுவாகும்.
* தக்காளி சாறு, தேன் மற்றும் சிறிது சமையல் சோடா இந்த மூன்றையும் நன்றாக கலந்து, பேஸ் மாற்றி கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் 3 முறை இப்படி செய்து வந்தால் கருவளையம் மறையும்.
* தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்,

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *