தொலைந்து விட்ட மொபைலில் UPI பேமெண்ட்ஸை செயலிழக்க செய்வது எப்படி?

UPI-ஐ பயன்படுத்தி BHIM மட்டுமின்றி ஃபோன்பே, கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட பல ஆப்கள் மூலம் மக்கள் எளிதாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மாதத்தில் மட்டும் நாட்டில் சுமார் 2,800 மில்லியனுக்கும் அதிகமான UPI பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பில் பேமெண்ட்ஸ்களில் இருந்து ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கி கணக்கிற்கு பணம் மாற்றுவது வரை, ரியல் டைம் பரிமாற்றம் தேவைப்படும் பெரும்பாலான நேரங்களில் மொபைல்கள் UPI அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தொலைந்த மொபைல் ஃபோனின் UPI பேமெண்ட்ஸ்ளை செயலிழக்க செய்வது எவ்வாறு?

உங்கள் மொபைல் போன் தொலைந்து விட்ட காரணத்தால் அதில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் UPI பரிவர்த்தனைகளை டிஆக்டிவேட் செய்ய நீங்கள் நடவடிக்கை எடுக்கும் நேரத்தில், உங்கள் UPI பின் அல்லது வேறு எந்த முக்கியமான விவரங்களையும் யாருடனும் ஷேர் செய்ய கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்ஒர்க்கின் கஸ்டமர் கேர் சர்வீஸை தொடர்பு கொண்டு உங்கள் தொலைபேசி எண்ணை பிளாக் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கை உங்கள் சிம் கார்டு அல்லது தொலைந்த மொபைல் ஃபோனைப் பயன்படுத்தி வேறு நபர்கள் அல்லது திருடர்கள் பரிவர்த்தனைகளை செய்வதை தடுக்க உதவும்.

2. தொலைந்து போன உங்கள் தொலைபேசி எண்ணை உங்கள் வங்கி கணக்கிலிருந்து பிளாக் செய்ய, நீங்கள் பயன்படுத்தும் வங்கியின் ஹெல்ப்லைனை அழைக்கவும். மேலும் அவர்களிடம் உங்களது UPI சர்வீஸை டிஸேபிள் செய்ய கோருங்கள்.

3. உங்கள் மொபைல் ஃபோன் இழப்பு குறித்து முதல் தகவல் அறிக்கையை (FIR) தாக்கல் செய்யுங்கள். நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் வசிப்பவர்கள் இதை ஆன்லைனில் எளிதாக செய்ய முடியும்.

நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் (NPCI) தளத்தின் FAQ பேஜில் ஒரு யூஸர் தன் மொபைல் ஃபோனை இழந்தால் மொபைல் எண்ணைத் பிளாக் செய்வது முக்கியம் என்று குறிப்பிடும் அதே நேரத்தில், யூஸர்கள் தங்கள் யுபிஐ அணுகலை தடுக்க அனுமதிக்க எந்தவொரு தீர்வையும் குறிப்பிடவில்லை.