வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த எம்பிக்கு 6 மாதம் சிறை தண்டனை!

2019ஆம் ஆண்டு தெலுங்கானாவில் உள்ள மகபுபாபாத் மக்களவை தொகுதியில் கவிதா மாலோத் வேட்பாளராகக் களமிறங்கினார்.

கவிதாவின் உதவியாளர் சவுகத் அலி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும்போது பறக்கும்படையால் பிடிக்கப்பட்டார்.

அந்த தேர்தலில் சுமார் 1,50,000/- வாக்குகள் வித்தியாசத்தில் கவிதாமாலோத் வெற்றிபெற்றார்.

இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று, தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

ஆதாரத்துடன் சிக்கியதால் கவிதாவையும் அவரது உதவியாளர் சவுகத் அலியையும் குற்றவாளிகளாக உறுதிசெய்து தலா ஆறு மாதங்கள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து.