திமுக வெற்றி பெற காரணமாக இருந்த சில முக்கிய வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை.
கேஸ் சிலிண்டருக்கு மானியமாக ரூ.100, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1000, விவசாயக் கடன், நகை கடன், கல்விக் கடன் தள்ளுபடி, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு ஆகிய வாக்குறுதிகள் எப்போது செயல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விவசாயிகளின் பயிர்க் கடன் மத்திய கால கடன்களாக மாற்றம் செயல்பாட்டு நிலுவையில் உள்ள கடன் விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அசல், வட்டி, அபராத வட்டி, இதர செலவு விவரங்களை உடனடியாக அனுப்பிவைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.