12-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த மதிப்பெண் பட்டியலை இன்று முதல் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 12-ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக பத்தாம் வகுப்பு தேர்வில் 50 சதவீதம் பதினோராம் வகுப்பு தேர்வில் 20% 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 30 சதவீத மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் http://dge.tn.gov.in மற்றும் http://dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிகல்வித்துறை அறிவிப்பு செய்துள்ளது.

By Siva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *