5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்றால் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

கோவை, நீலகிரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.