தபால்துறை முகவர் நேர்காணல் முகாம்

திருப்பூர் தபால் கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நேரடி முகவர்களாக நேர்காணல் நடந்தது.

ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள தலைமை தபால் அலுவலகத்தில் நேற்று காலை, 10:00 மணி முதல் நடந்த நேர்காணல் நடந்தது.

கல்லுாரி படிப்பு முடித்த மாணவ, மாணவியர் முதல், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், அதிகாரிகள் வரை பல்வேறு தரப்பினும் பங்கேற்றனர்.

பேச்சுத்திறன், சுற்றத்தாருடனான உறவு, பழக்கவழக்கம் ஆகியவற்றை கேட்டறிந்து அதற்கேற்ப முகவர்கள் தேர்வு செய்யப்படுவர். பாலிசி பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.