வரும், 5ல் முதல்வர் ஸ்டாலின் ஓசூர் வருகை தருவதால், ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் ஸ்டாலின், சூளகிரி அடுத்த சாமனப்பள்ளியில், ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
அங்கிருந்து ஓசூர் வந்து, ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாமை துவக்கி வைத்து பேசுகிறார்.
சாமனப்பள்ளி, ஓசூர் காமராஜ் காலனியிலுள்ள விளையாட்டு மைதானத்தை தயார் செய்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி, எம்.எல்.ஏ., பிரகாஷ் ,அதிகாரிகள் விழா திடல்களை ஆய்வு செய்தனர்.