தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்கு பின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
ஒரு லிட்டர் எரிபொருளில் ரூ.31.50 மத்திய அரசுக்கு வரியாக செல்கிறது என கூறினார்.
ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.55.15 நஷ்டத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
முறையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.”
69 பொதுத்துறை நிறுவனங்களில் 26 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.
2019 – 20ம் ஆண்டு காலக்கட்டத்தில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 1.89 சதவீதமாகவே இருந்தது.