மின்னஞ்சல் கடவுச்சொல்லை மறந்தார்… 6255 டொலர் அபராதம் செலுத்தினார்

கனடா எல்லையில் வைத்து மின்னஞ்சல் கடவுச்சொல்லை மறந்த ரொறன்ரோ நபர் 6,255 டொலர் அபராதம் செலுத்திய சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்கா சென்று விட்டு கனடா திரும்பியிருந்த 56 வயது Saadi Kadhum என்பவரே கடவுச்சொல் மறந்து போனதால் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

ஜூலை மாத இறுதியில் மகளின் திருமணத்திற்காக Saadi Kadhum அமெரிக்கா சென்றுள்ளார்.பின்னர் தமது வாகனத்தில் கனடா திரும்பியுள்ளார்.

மின்னஞ்சல் கடவுச்சொல் மறந்ததால், அவருக்கு 5,000 டொலர் அபராதமும், விதிகளை மீறியதாக கூறி 1,255 டொலர் அபராதமும் விதித்துள்ளனர்.

மட்டுமின்றி 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.