மதன் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!!

பப்ஜி மதன் வழக்கில் 1,600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சைபர் கிரைம் போலீஸ்.

30 சாட்சிகளின் வாக்குமூலத்துடன் 45 நாட்களில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது

பப்ஜி மதன் 2 ஆயிரத்து 848 பேரிடம் கொரோனா உதவி செய்வதாகக் கூறி 2.89 கோடி ரூபாய் பெற்று பணமோசடி செய்துள்ளார்.

அவர் மீது பண மோசடி (420) பிரிவின் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது