விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு; எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதாக எஸ்.ஏ.சந்திரசேகர் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், கடந்த 2020ம் ஆண்டு அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார்.

அரசியல் கூட்டங்கள் நடத்தவோ, வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி நடிகர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது ,மனுவில் அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கு அக்டோபர் 29க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.