இந்திய விமானப் படை புதிய தளபதி

இந்திய விமானப் படை தளபதியாக ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ்.பதூரியாவின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இவர் மிக் 29 ரக விமானத்தை இயக்குவதில் தேர்ந்த முன்னோடி. ஆகஸ்ட் 1, 2020 தொடங்கி, இவர் மேற்கு ஏர் கமாண்ட் தலைவராக இருக்கிறார்.

இவருடைய பணிக்காலத்தில் 3800 மணி நேரம் விமானப் பயண அனுபவம் கொண்டுள்ளார்.