ஐதராபாத்து வெற்றியால் புள்ளி பட்டியலில் குழப்பம்?

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி மிக அபாரமாக வெற்றி பெற்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த அணிக்கு இன்னும் 4 போட்டிகள் உள்ள நிலையில் நான்கிலும் வெற்றி பெற்றாலும் 12 புள்ளிகள் தான் கிடைக்கும் என்பதால் இந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மும்பை ஆகிய நான்கு அணிகளும் 8 புள்ளிகளைப் பெற்றுள்ளதால் இவற்றில் ஏதாவது ஒரு அணி மட்டும் அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை மற்றும் டெல்லி கிட்டதட்ட அடுத்த சுற்றை உறுதி செய்துள்ள நிலையில் பெங்களூர் அணி இன்னும் ஒன்று அல்லது இரண்டு வெற்றிகளை பெற்றால் அடுத்த சுற்றை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது