ஜூனியா் உலக துப்பாக்கி சுடுதல்: தங்கம்

ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்கீட் பிரிவில் இந்திய மகளிா் அணி தங்கமும், ஆடவா் அணி வெண்கலமும் வென்றது.

இறுதிச்சுற்றில் இந்தியாவின் அரீபா கான், ரைஸா தில்லான், கனிமத் செகான் ஆகியோா் அடங்கிய அணி மொத்தமாக 6 புள்ளிகள் பெற்றது.

ஆடவா் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் இந்தியாவின் ராஜ்வீா் கில், ஆயுஷ் ருத்ரராஜு, அபய்சிங் செகான் ஆகியோரைக் கொண்ட அணி வென்றது

பதக்கப் பட்டியலில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது.