இன்றைய ராசி பலன்கள் !!

0 0
Read Time:6 Minute, 52 Second

இன்றைய பஞ்சாங்கம்

12-11-2021, ஐப்பசி 26, வெள்ளிக்கிழமை, நவமிதிதி பின்இரவு 05.31 வரை பின்பு வளர்பிறைதசமி.

அவிட்டம் நட்சத்திரம் பகல் 02.53 வரைபின்பு சதயம்.

நாள் முழுவதும் சித்தயோகம்.

 

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

புதியமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் – பகல் 10.30-12.00,

எம கண்டம்- மதியம் 03.00-04.30,

குளிகன்காலை 07.30 -09.00,

சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

இன்றைய ராசிப்பலன் – 12.11.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உறவினர் வருகை மகிழ்ச்சியை தரும். புத்திர வழியில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்களின் உதவியால் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள்மதிப்பும் மரியாதையும் கூடும். வீட்டுதேவைகள் பூர்த்தியாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன்கிடைக்கும். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின்ஆதரவு கிட்டும்.

கடகம்

இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. சுப முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம்சீராக இருக்கும். சிலருக்கு புதிய வேலைவாய்ப்பு அமையும். வருமானம் இரட்டிப்பாகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசுதுறையில் பணி புரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

துலாம்

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக இருக்கும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்பட்டால் குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் உண்டாகும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு மனதில் குழப்பம் தேவையற்ற கவலை உண்டாகும். உத்தயோகத்தில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன்பிறந்தவர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். வியாபாரத்தில் சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

தனுசு

உங்களின் ராசிக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும்.

மகரம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனநிம்மதி குறையும். எதிர்பார்த்த பணவரவுகள் கடைசி நேரத்தில் தடைபடலாம். உறவினர்கள் வழியாக செலவுகள் ஏற்பட்டாலும் சுபச் செலவுகளாகவே இருக்கும். அனுபவமுள்ளவர்களின்ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பர்களாக மாறிசெயல்படுவார். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

மீனம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சிறுதடைக்குப்பின் அனுகூலப் பலன் கிட்டும். புதிய மாற்றங்களை செய்வதன் மூலம்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதுநல்லது.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*