அமேசானின் சென்னை அலுவலகத்தின் சிறம்பம்சங்கள் என்ன?

தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என பார்ப்போம்.

அமேசான் நிறுவனத்தின் மிகப் பெரிய அலுவலகமானது, 8.23 லட்சம் சதுர அடி பரப்பளவில், 18 தளங்களுடன், 6,000 பணியாளர்கள் பணிபுரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தின் நான்காவது அலுவலகம் ஆகும்.

உலக வர்த்தக மையத்தில் உள்ள 28 தளங்களைக் கொண்ட வளாகத்தில் 18 தளங்களில் அமேசான் நிறுவனம் அமைத்துள்ளது. இந்த அலுவலகம் தமிழகத்தின் தலைமை அலுவலகமாக செயல்பட உள்ளது.

புதிய அலுவலகத்தில் 4 பெரிய அளவிலான சேமிப்பு கிடங்குகள் மற்றும் 3 சிறிய அளவிலான சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.