அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் சம்பளம் பிடித்தம்..!

மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் 28ஆம் தேதி பஸ் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் தீவிரமாக ஈடுபட்டனர். அதில், பெரும்பாலான தொழிலாளர்கள் 29ஆம் தேதி பணிக்கு திரும்பினர்.

இந்த வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டால், அவர்களுக்கு சம்பளம் கிடையாது என்று அரசு அறிவித்தது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ‘நோ ஒர்க் நோ பே’ என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.