ஆட்டத்தை ஆரம்பித்த டாடா.. இனி இந்தியாவுக்கு யோகம் தான்..!

டாடா குழுமம் நவம்பர் மாதத்தில் OSAT பிரிவில் சுமார் 300 மில்லியன் டாலர் முதலீட்டில் மிகப்பெரிய செமிகண்டக்டர் அசம்பிளி தொழிற்சாலையை அமைப்பதாக அறிவித்தது.

இதைத் தொடர்ந்து தான் வேதாந்தா மற்றும் மதர்சன் சுமி ஆகிய நிறுவனங்கள் இத்துறையில் இறங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

ஒசூரில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளைத் தயாரிக்க மாபெரும் தொழிற்சாலையை அமைந்துள்ள டாடா குழுமம், லாக்டவுன் காலத்தில் ஆட்டோமொபைல் முதல் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியைப் பாதித்த சிப் தட்டுப்பாட்டின் மூலம் புதிய வர்த்தகத்தை உருவாக்கியது.

இந்தப் பங்கு கைப்பற்றல் அடுத்த 90 நாட்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.