இனி இந்த போன்களில் WhatsApp இயங்காது !

உலகளவில் அதிக பயனர்களைக் கொண்ட செயலியாக WhatsApp வலம் வருகிறது.பயனர்களின் தேவைக்கேற்ப பல மாற்றங்களையும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

பாதுகாப்பு, அம்சங்கள் என Meta வாட்ஸ்அப் செயலியை பல கட்டங்களாக மேம்படுத்தி வருகிறது.

இந்த சூழலில், சில ஸ்மார்ட்போன்களுக்கு சேவையை நிறுத்த உள்ளதாக நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது

மொபைலில் ஆண்ட்ராய்டு 4.1 அல்லது அதற்கு முந்தைய பதிப்பு இருந்தால், வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்திவிடும்.

iOS போன்கள்: iOS 10 பதிப்பு அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் உள்ள iPhone பயனர்கள் தங்கள் சாதனத்தில் WhatsApp-ஐ பயன்படுத்த முடியும்.