இன்று தான் கடைசி! இந்த மாடல் ஃபோன்களில் வாட்ஸ்-அப் இயங்காது!

டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே அனுப்பும் வகையில் அறிமுகமான வாட்ஸப் இன்று பல மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டுள்ளது.

அப்டேட்களுக்கு ஏற்ப பழைய மாடல் செல்போனில் இருந்து வாட்ஸ் அப் நீக்கப்பட்டும் வருகிறது. அதன்படி மார்ச் 31ம் தேதி முதல் சில போன்களில் வாட்ஸ் அப் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் செல்போனில் ஆண்ட்ராய்டு 4.1 அல்லது அதற்கு முந்தைய வெர்ஷன் இருந்தால் நாளை முதல் வாட்ஸ் அப் இயங்காது.

ஜெயில்பிரோக் (jailbroken) செய்யப்பட்ட ஐபோன்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று வாட்ஸ்அப் கூறுகிறது.