இல்லம் தேடி கல்வித் திட்டம்

anbil-magesh
anbil-magesh
anbil-magesh

இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது: “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் நலன் கருதி பள்ளிக் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளித்து ரூ.36,895 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

அதன்படி மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களோடு ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகின்றது.

தமிழக முதல்வர் மாணவர்களின் நலனில் அக்கறையோடு சிந்தித்து செயல்படுகிறார். முதல்வரின் சிந்தனை திட்டங்களை பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

மாணவர்களின் வளர்ச்சியில் ஆரம்பக் கல்வி மிக முக்கியமானது. ஆசிரியர்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப புதிய விஷயங்களை கற்றறிந்து தங்களது தனித்திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.