பூமியை நாளை தாக்கும் சூரியப்புயல்…

மேற்பரப்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக வெப்பப்புயல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த புயல் நாளை பூமியைத் தாக்கும் எனவும் கொல்கத்தா இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த புயலினால் ஏற்படும் அலைகள் கிரகத்தின் வழியாகவோ, செயற்கைக்கோள் வழியாகவோ செல்லும் போது பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

சூரியனின் மேற்பரப்பில் கடந்த 28-ம் தேதி வெடிப்பு ஏற்பட்ட நிலையில், இதனால் ஏற்பட்ட காந்தப் புயல் நாளை பூமியைத் தாக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.