வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை..!

நாளை முதல் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாகும். அதன்படி, நாளை,2-ம் தேதி நவராத்திரி முதல் நாள் மற்றும் உகாதி பண்டிகை. 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. 4-ம் தேதி சர்ஹுல் பண்டிகை (ராஞ்சி).

5-ம் தேதி பாபு ஜகஜீவன் ராம் பிறந்த நாள் (ஹைதராபாத்). இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை என்பதால், பொதுமக்களுக்கு வங்கிகளில் ஏதாவது வேலைகள் இருந்தால் அதை விரைந்து சென்று இன்றே முடிப்பது நல்லது.