விதி மீறி காரில் டின்ட் கிளாஸ்: பிரபல நடிகருக்கு அபராதம்

கார்களில், கருப்பு பிலிம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கண்ணாடிகளை (டின்ட் கிளாஸ்) பொருத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு நடிகரான மனோஜ் மன்சுவுக்கும் ஹதராபாத் போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்துள்ளனர்.

ஹதராபாத்தின் டோலிசோவ்கி (Tolichowki) பகுதியில் அதிக டின்ட் ஒட்டப்பட்ட காரை மறித்தபோது அதில் நடிகர் மனோஜ் மன்சு இருந்தார்.

அந்த காரில் இருந்த டின்ட்களை அகற்றிய போலீஸார், அவருக்கு ரூ.700 அபராதம் விதித்தனர்.