ஓடிடி தளங்களுக்கும் தணிக்கையா? பரபரப்பு தகவல்

ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை வேண்டுமென மாநிலங்களவையில் பிஜு ஜனதாதள உறுப்பினர் பிரசன்னா ஆச்சார்யா பேசியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

ஓ.டி.டி. தளங்கள் ஏராளமான பார்வையாளர்களை பெற்ற நிலையில் அதை பயன்படுத்தி, ஆபாச காட்சிகளை காட்டுகின்றன. ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றன. இவை இளம் தலைமுறையினரிடம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும், இந்த தளங்கள், மத நல்லிணக்கத்துக்கு எதிரான காட்சிகளையும் காட்டுகின்றன. திரைப்படங்களுக்கு தணிக்கை முறை இருப்பதுபோல், ஓ.டி.டி. தளங்களுக்கும், வெப் சேனல்களுக்கும் தணிக்கை முறை இருந்தால் இப்படி நடக்காது என்று கூறினார்.