லூலூ நிறுவனத்தை தமிழகத்தை அழைத்தது நாங்கள் தான்: அதிமுக முன்னாள் அமைச்சர்

லூலூ நிறுவனம் தற்போது தமிழ்நாட்டுக்கு வருவது மகிழ்ச்சி என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க லூலு குழுவினரை முதலில் அழைத்தது நாங்கள் தான் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.

துபாயில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் லூலு நிறுவனம் ரூ 3500 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.