ஒரு வருடம் விண்வெளியில் இருந்து சாதனை: குவியும் வாழ்த்துக்கள்

நாசா விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய் என்பவர் கடந்த 2021, ஏப்ரல் 9-ம் தேதி அன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் பூமியில் இருந்து புறப்பட்ட நிலையில் 355 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து சாதனை செய்துள்ளார்.

இதற்கு முன்பு ஸ்காட் கெல்லி விண்வெளியில் தொடர்ந்து 340 நாட்கள் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

355 நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்த விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய், கஜகஸ்தானில் ரஷிய விண்வெளி காப்ஸ்யூலில் இன்று பூமிக்கு திரும்பினார்.

அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.