அடுத்த 3 மணி நேரம்..திக்..திக்..!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில்மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்புள்ளதால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்வது நல்லது.