அமைச்சரவையில் மாற்றம்…மேலும் 2 அமைச்சர்கள்!

தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு பொறுப்பேற்று, வரும் மே 7ல் ஓராண்டு முடிகிறது. இதைக் கொண்டாட, சட்டசபையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை:தமிழக அமைச்சரவையில் மேலும் இரண்டு அமைச்சர்களை மாற்ற முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

சட்டசபை கூட்டம் முடிந்ததும் இந்த மாற்றத்தை செய்வதற்கான பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. முதல்வரின் மகன் உதயநிதிக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் தியாகராஜன், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரின் செயல்பாடுகளை சட்டசபையிலேயே முதல்வர் பாராட்டி உள்ளார்.