ஆசிரமம் தொடங்கிய பெண் சாமியார் அன்னபூரணி..!

திருவண்ணாமலை,கீழ்பெண்ணாத்தூர் அடுத்த இராஜாதோப்பு பகுதியில் அன்னபூரணி என்ற பெண் சாமியார் ஆசிரமம் கட்ட நிலம் வாங்கி இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

பொதுமக்களிடம் பேசிய பெண் சாமியார் ,அனைத்து பொது மக்களுக்கும் ஆன்மீக பயிற்சி வழங்குவதாகவும், ஆன்மீக பயிற்சி வழங்கி முக்தி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் பல்வேறு பெரு நகரங்களை விட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரமம் தொடங்க காரணம் என்னவென்று செய்தியாளர்களின் கேள்விக்கு,

தன்னால் அதிக பணம் செலவழிக்க முடியாது, குறைந்த அளவில் பணம் செலவழித்து இந்த இடத்தை வாங்கியதாகவும் கூறியுள்ளார்