ஆந்திராவில் கடுமையான மின்வெட்டு!!

ஆந்திராவில் கோடை காலம் என்பதால் மின்சார பயன்பாடு அதிகரித்து வருவதால் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மின்வெட்டு காரணமாக அரசு மருத்துவமனைகளில் செல்போன் லைட், மெழுகுவர்த்தி, டார்ச்லைட் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அனகாப்பள்ளி மாவட்டத்தில் உள்ள என்.டி.ஆர். அரசு மருத்துவமனை உள்பட மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் இதே நிலை உள்ளது.

ஆந்திராவில் தினசரி மின்பற்றாக்குறை தற்போது 4.5 லட்சம் யூனிட்களாக உள்ளது.

தொழிற்சாலைகளுக்கு கூட மின்சாரம் வழங்க முடியாமல் வாரத்திற்கு 2 நாள் அதிகாரப்பூர்வ மின்வெட்டை அறிவித்து தொழிற்சாலைகளுக்கு கட்டாய விடுமுறை அறிவித்துள்ளது.