ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,000-யை நெருங்கி வருகிறது.இன்று தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4,987 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 39,896 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 73.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளி 73,800ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.