ஆம்வே நிறுவனத்தின் ரூ.758 கோடி சொத்துக்கள் முடக்கம்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஆம்வே நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் கிளை பரப்பி இயங்குகிறது .

இந்நிறுவனம் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் பொருட்களை விலை கொடுத்து வாங்கி உறுப்பினராக இணைந்தால், விரைவில் பணக்காரர் ஆகலாம் என ஆசை வார்த்தைகளை காட்டி பலரை தங்களது நிறுவனத்தில் உறுப்பினர்களாக இணைத்துள்ளது.

 

அதிக விலைகொடுத்து வாங்குவதால் பல நூறு கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஆம்வே நிறுவனம், தங்கள் நிறுவன பொருட்களை நேரடி விற்பனை செய்யாமல், மல்டி-லெவல் மார்க்கெட்டிங் நெட்வொர்க் என மோசடியை செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது

இந்த மோசடி தொடர்பாக சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் அடிப்படையில் ஆம்வே இந்தியா நிறுவனத்தின் 758 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

அந்த நிறுவனத்தின் தொழிற்சாலை, இயந்திரங்கள் வாகனங்கள் நிலங்கள் மற்றும் வங்கி வைப்புத் தொகை ஆகியவற்றை முடக்கியுள்ளது. 412 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள்

346 கோடி மதிப்புள்ள வங்கியில் உள்ள தொகை என நிறுவனத்திற்கு சொந்தமான 36 வங்கிக் கணக்குகளை முடக்கி உள்ளது

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/