இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ்? – மத்திய அரசு

உலகின் பல பகுதிகளில் உருமாற்றமடைந்த ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

மேலும் உருமாற்றமடைந்த இந்த புதிய வகை உருமாற்றத்திற்கு ’எக்ஸ்இ’ வகை வைரஸ் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

இந்த ‘எக்ஸ்இ’ வைரஸ் கடந்த ஜனவரி 19-ம் தேதி இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் வேகமாக பரவக்கூடியது.

ஒமைக்ரான் வைரசில் உள்ள பிற திரிபை விட ‘எக்ஸ்இ’ வகை 10 சதவீதம் அதிக வேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை ஒமைக்ரானின் உருமாற்றமடைந்த ‘எக்ஸ்இ’ வகை கொரோனா பரவில்லை.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/