இனி பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் – மாநில அரசு

2021-22ம் கல்வியாண்டு முடிவுக்கு வந்திருப்பதால், மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பல மாநிலங்களில் பள்ளிகள் செயல்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் காலை 7.30 மணி முதல் மதியம் வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் அரை நாள் மட்டும் வகுப்புகளை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.