இரண்டாக பிளந்த விமானம்.. பதற வைக்கும் விமான விபத்து!

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கோஸ்டாரிகா. குட்டி நாடான கோஸ்டாரிகா சுற்றுலாத் துறையை நம்பியே உள்ளது.

கோஸ்டாரிகாவில் சரக்கு விமானம் ஒன்று தரையிறங்கும்போது அப்படியே இரண்டாகப் பிளந்துள்ளது.

கோஸ்டாரிகாவில் டிஎச்எல் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் அவசரமாகத் தரையிறங்கியது. அப்போது திடீரென விமானம் விபத்திற்குள்ளானதில், அது இரண்டாகப் பிளந்தது.

இந்தத் திடீர் விபத்து காரணமாக கோஸ்டாரிக்காவில் உள்ள சான் ஜோஸில் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

அப்படியே விமானம் இரண்டாக உடைந்து நின்றது. இது தொடர்பான ஃபோட்டா மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/