இரு மாதங்களுக்கு வண்டல் மண் எடுக்கலாம்: தமிழக அரசு

விவசாயிகள் தங்கள் வயலில் உள்ள மண்வளத்தை மேம்படுத்த ஏரிகள், குளங்களில் உள்ள வண்டல் மண்ணை பயன்படுத்திக் கொள்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடா்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளா் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

ஏரி, குளத்தில் எந்தெந்த பகுதிகளிலிருந்து வண்டல் மண்ணை இலவசமாக எடுக்கலாம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் போன்ற மாவட்டங்கள் தவிா்த்து, இதர மாவட்டங்களில் ஏரி, குளங்களில் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு இரண்டு மாதங்களுக்குள் வண்டல் மண் எடுக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/