இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு !

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு , விலை உயர்ந்துள்ளது.

இதில் 13 மணி நேர மின்வெட்டு மக்களை முற்றிலுமாக முடக்கியுள்ளது.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என கொழும்புவில் உள்ள அவர் வீட்டின் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக அவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.