இளையராஜாவை அவமதித்தல் ? பா.ஜ.க. தேசிய தலைவர் கண்டனம்

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் மோடியை அம்பேதகருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் தனது கருத்தை சொல்லியிருந்தார்.

ஒரு தரப்பினர் அவரது கருத்துக்கு எதிர்ப்பும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

தனது கருத்தை ஒருபோதும் திரும்பப் பெற மாட்டேன் என இளையராஜா திட்டவட்டமாக தன்னிடம் தெரிவித்ததாக அவரது சகோதரர் கங்கை அமரன் தகவல் கொடுத்திருந்தார்.

இத்தகைய சூழலில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இந்த விவகாரம் தொடர்பாக தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாட்டை ஆளும் ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள் இளையராஜாவை அவமதித்து வருகிறார்கள். இளையராஜா குறித்த விமர்சனங்களில் ஜனநாயகம் இல்லை.

இது மாதிரியான சம்பவங்களில் எதிர்கட்சிகள் சகிப்புத்தன்மையின்றி நடந்து கொள்கின்றன என கூறி உள்ளார்.

 

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/